தென்காசி யூனியன் கூட்டம
தென்காசி யூனியன் கூட்டம் நடந்தது.
தென்காசி பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை குழந்தைகள் நலன் கருதி தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர மேலும் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர் அழகு சுந்தரம் குத்துக்கல்வலசையில் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளதா? அப்படி அமைப்பதாக இருந்தால் மன்றத்தில் தகவல் தெரிவித்து விட்டு பணி தொடங்குங்கள் என்றார். அதற்கு அதிகாரிகள் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணி எதுவும் இல்லை. அவ்வாறு அமைக்கும்போது மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மன்றத்தில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.