தென்காசி ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டம் தொடக்கம்


தென்காசி ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:30 AM IST (Updated: 7 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி ரெயில் நிலைய மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடந்தது.

தென்காசி

பாரத் அம்ரித் என்ற ரெயில் நிலையங்கள் மேம்பாட்டு திட்டம் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தென்காசி ரெயில் நிலையமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதைெயாட்டி தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் ரமேஷ் பாபு, தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், பா.ஜ.க. துணைத் தலைவர் முத்துக்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர் பாண்டியன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவடையும்போது பா.ஜ.க.வினர் 'பாரத் மாதா கீ ஜே', 'மோடி வாழ்க' என்று கோஷம் எழுப்பினர். உடனே அங்கிருந்த தி.மு.க.வினர் 'தமிழ்நாடு வாழ்க, தளபதி வாழ்க' என்று கோஷம் எழுப்பினர். இருதரப்பினரும் மாறி மாறி போட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story