தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தென்காசி,
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி தொடங்கியது. தினமும் காலையிலும் இரவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருடன் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9-35 மணிக்கு சுவாமி தேர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேள தாளங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க பக்தர்களின் பக்தி கோஷத்துடன் தேர் நான்கு ரகவீதிகளையும் சுற்றி காலை 10-25 மணிக்கு நிலையத்தை அடைந்தது. பின்னர் 10-50 மணிக்கு அம்மன் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
இந்த தேரும் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி மதியம் 12 மணிக்கு நிலையத்தை அடைந்தது. இந்த விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தென்காசி பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் நீர் மோர் சேவை நடைபெற்றது. இதேபோன்று பல்வேறு அமைப்பினர் குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர்.