தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா


தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 19 May 2023 12:30 AM IST (Updated: 19 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை நிதியின் கீழ் ரூ.22½ கோடி செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரை தளத்துடன் சேர்த்து 6 தளங்களில் இந்த கட்டிடம் அமைகிறது. இதில் பதிவு செய்யும் அறை முதல் முன் கவனிப்பு மற்றும் பின் கவனிப்பு அறைகள், பிரசவ அறை மற்றும் குடும்ப கட்டுப்பாடு வரை அனைத்து பிரிவுகளும் அமைய உள்ளது. மேலும் ரூ.80 லட்சம் செலவில் ஒன் ஸ்டாப் சென்டர் என அழைக்கப்படும் பெண்கள் காப்பக கட்டிடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகர்மன்ற தலைவர் சாதிர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.




Next Story