தென்காசி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவு; சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


தென்காசி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவு; சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x

தென்காசி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவை, போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்தார்.

தென்காசி

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில் ஆயுதப்படை பிரிவு குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான ரோஜா காட்டேஜ் என்ற கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆயுதப்படை போலீசாரிடம் அவர் பேசும் போது பணியின் போது விழிப்புடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று கூறி அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 3 ஏட்டுகள், 2 முதல் நிலை போலீசார், 150 இரண்டாம் நிலை போலீசார், 60 இரண்டாம் நிலை பெண் போலீசார் உட்பட மொத்தம் 222 போலீசார் இங்கு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரிவினருக்கு மைதானம் ஆயிரப்பேரி அருகில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story