டெண்டர் முறைகேடு; இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன - ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் தகவல்


டெண்டர் முறைகேடு; இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன - ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் தகவல்
x

நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் கூறியிருந்தது. மேலும் புகரை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டதால், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐகோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள அறப்போர் இயக்கம், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், புகாரை வெளியிட்டது அவதூறு இல்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கு வரும் 23-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story