சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
x

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மாத்தூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி.இவருடைய மகன் அமுல் என்ற அமல்ராஜ் (வயது 52). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுமி, அமல்ராஜின் உறவுக்காரர் ஆவார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமல்ராஜை கைது செய்தார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது அவர் அமல்ராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.1½ லட்சம் வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Next Story