கோவில் சிலை சேதம்; போலீசார் விசாரணை
குற்றாலம் அருகே கோவில் சிலை சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி
தென்காசி:
குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலின் பின்புறம் பன்றி மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் சிலையை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாடசாமி என்பவர் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, வக்கீல் அணி பொதுச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் இந்து முன்னணியினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story