கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

சிவந்திபுரம் ஊராட்சி வராகபுரம் உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், செல்வ விநாயகருக்கு பூந்தட்டு எடுத்தல், கும்பம் ஏற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து பாபநாசத்தில் இருந்து கிரகம் எடுத்து வருதல், செல்வ விநாயகர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது. பின்னர் பூக்குழி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வருதல், வில்லிசையும், சாமக்கொடையும் நடைபெற்றது.


Next Story