கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 16 July 2023 12:30 AM IST (Updated: 16 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கச்சேரி காம்பவுண்டு வளாகத்தில் மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டைமாடன், கோட்டைமாடத்தி மற்றும் கோட்டை முத்துமாரியம்மன் கோவல் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா கடந்த 7-ந் தேதி திருக்கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் மதியம் அன்னதானமும், மாலையில் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பூத்தட்டு ஊர்வலமும் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் தலைமையில், தலைவர் கருப்பையா, செயலாளர் செல்வா, பொருளாளர் கருப்பசாமி மற்றும் விழாக்கமிட்டியினா் செய்திருந்தனர்.


Next Story