திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் அம்மன் தீ குண்டத்துக்கு எழுந்தருள கங்கணம் கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story