அரசனட்டியில் கரியம்மா கோவில் கும்பாபிஷேக விழா-பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


அரசனட்டியில் கரியம்மா கோவில் கும்பாபிஷேக விழா-பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரியம்மா, கரியம்மா, ஆனகோண்ட்லம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நடைபெற்றது. முன்னதாக சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பூசாரிகள் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலிருந்தும் திரளான குரும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story