கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா


கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா
x

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பண்ணைப்பட்டியில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருது விடும் விழா நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மாடுகள், ஊர் கவுடர் முத்துசாமி தலைமையில் வீருதியம்மன் கோவிலில் இருந்து பெரியாண்டவர் கோவிலுக்கு ஓடவிடப்பட்டது. அப்போது போட்டிப்போட்டு கொண்டு மாடுகள் ஓடின. இதில், முதலிடம் பிடித்த மாட்டுக்கு பரிவட்டம் கட்டி, மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Next Story