பவித்திரம் புதூர் ஊராட்சி பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா


பவித்திரம் புதூர் ஊராட்சி  பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
x

பவித்திரம் புதூர் ஊராட்சி பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே பவித்திரம் புதூர் ஊராட்சி நவலடிபட்டி கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் மற்றும் அங்கண்ணன் கோவில் தேர்த்திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

விழாவில் நேற்று முன்தினம் தேர்வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு 1,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று பொங்கல் பூஜை, கிடா வெட்டுதல் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) சாமி ஊஞ்சலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தாக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story