கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா


கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 28 Sept 2023 2:30 AM IST (Updated: 28 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தேனி

கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோவிலில் நேற்று திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர்.

மேலும் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அத்துடன் பக்தர்கள் சிவன், முருகன், விநாயகர், காளிதேவி உள்ளிட்ட கடவுள் வேடமணிந்து, டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்தனர். மேலும் தப்பாட்டம், மேளதாளம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story