பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிப்பது சிறப்பம்சமாகும். பல்வேறுகளை சிறப்புகளை கொண்ட பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி வைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story