செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா
செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்
கபிஸ்தலம் வடக்கு செங்குந்தர் தெருவில் உள்ள செல்வ சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதல், சக்தி கரகம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. கடந்த 26-ந் தேதி துர்க்கா தேவி எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி, 27-ந் தேதி பச்சைக்காளி, பவளக்காளி எல்லை வலம் வருதல் நிகழ்ச்சி, 28-ந் தேதி காளிகாதேவி படுகளம் சுற்றி வல்லான் கோட்டைக்கு வருதல் மாங்கல்ய பிச்சை தருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கபிஸ்தலம் பகுதியில் காளியம்மன் திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் பால்குடம், பால்காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story