சார்வாய்புதூரில் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
சார்வாய்புதூரில் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தலைவாசல்:
தலைவாசல் அருகே சார்வாய்புதூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் இரும்பு கம்பியால் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்னி கரகம், பூங்கரகம், எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுதவிர கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வேடமணிந்து கேரள செண்டை மேளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக ஆடி வந்தனர்.
தேரோட்டம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. முக்கிய வீதி வழியாக வந்து இரவு 8 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை ெயாட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு நாளும் காவல் தெய்வங்கள் புஷ்ப அலங்காரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தேரோட்டத்தில் தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, சார்வாய் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராணிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.