மழை மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மழை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மழை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தியில் மழைமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேைர வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story