கல்யாணவெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்


கல்யாணவெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்
x

கல்யாணவெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

தற்காஸ் கிராமத்தில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கல்யாண வெங்கடேச பெருமாள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் பழமை வாய்ந்த கல்யாணவெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 10-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சேஷவாகனம், கருடசேவை புறப்பாடு, அனுமந்தவாகனம், வேணுகானம், சூரியபிரபை புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

16-ந் தேதி கல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணமும், 17-ந் தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா காட்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்

இதை முன்னிட்டு கல்யாண வெங்கடேச பெருமாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து தேரில் கல்யாண வெங்கடேச பெருமாள் எழுந்தருளினார்.

அப்போது திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story