கோவில் காளை சாவு


கோவில் காளை சாவு
x

ஜல்லிக்கட்டில் கலக்கிய கோவில் காளை பரிதாபமாக இறந்தது. கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் உள்ள வீரமுடையான் சுவாமி கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று இருந்தது. இந்த காளை, வயது முதிர்வு காரணமாக நேற்று காலை இறந்து விட்டது. இதனையடுத்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, கோவில் காளையின் உடல் அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டது. அதற்கு மாலைகள், வேட்டி, துண்டுகள் அணிவித்தும், சந்தனம், ஜவ்வாது பூசியும் கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இறந்து போன இந்த கோவில் காளை ஜல்லிக்கட்டில் கலக்கியுள்ளது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அரளிப்பாறை, கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவில் அருகிலேயே காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோவில் காளை இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story