தேய்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தேய்பிறை பஞ்சமியையொட்டிவராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தேய்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் வராகி ஹோமமும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து ராகு கால சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மனுக்கும் தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஏ. கொல்வஅள்ளி சாலையில் மொடக்கேறி பகுதியில் உள்ள 16 அடி உயர வராகி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story