பள்ளிபாளையத்தில்ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் காவிரி கரையில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை பூங்கரகத்துடன் காவிரி ஆற்றில் இருந்து வேல் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். ராஜவீதி, அம்மன் கோவில் தெரு, பஸ் நிலைய ரோடு ஆகிய தெருக்கள் வழியாக ஊர்வலம் சென்று கோவிலை அடைந்தது.
இதையடுத்து மதியம் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) கன்னிமார் சாமி ஊர்வலம், இரவு ஓங்காளியம்மனின் சிம்ம வாகன ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.