கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்-இன்று தேரோட்டம் நடக்கிறது
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி தெலுங்கர் தெரு கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் ரத சப்தமி தேர்த்திருவிழா கடந்த 24-ந் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி சாமி, அனுமன் வாகனத்தில் வீதிஉலா சென்றார். நேற்று முன்தினம் இரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு சேஷ வாகனத்தில் சாமி வீதிஉலா சென்றார். நேற்று மாலை சாமி திருக்கல்யாண சீர்வரிசை அழைத்து நடந்தது. இரவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம நடந்தது. பின்னர் கருட வாகனத்தில் சாமி வீதிஉலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான ரதசப்தமி தேரோட்டம் நடக்கிறது. வாஸ்து பூஜையை தொடர்ந்து சாமி தேரில் எழுந்தருளி, அருள்பாலிக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வசந்த உற்சவ கொடி இறக்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.