புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:30 AM IST (Updated: 1 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது., இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரியில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்கார சேவை, சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் கருடாழ்வாருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மணியம்பாடி

இதேபோன்று மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி லிங்க அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை தொழில் அதிபர் துரைசாமி செட்டியார் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், தொழிலதிபர் சின்னராஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின்போது கொடி மரத்தில் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பக்தர்கள் மகாதீபம் ஏற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பழைய தர்மபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அக்கமனஅள்ளி

இதேபோல் செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், கம்பைநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், தென்கரைக்கோட்டை பட்டாபிராமர் சாமி கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

மேலும் மூக்கனூர் அக்கமணஅள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. விழாவையையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சுயம்பு பெருமாள்

தர்மபுரி அருகே தோக்கம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு சென்றாய பெருமாள் சாமி கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story