தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதம்


தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதம்
x

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமானது

திருச்சி

சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை வரை செல்லும் (வண்டி எண் 22671) தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சென்னையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10 மணிக்கு வரும். பின்னர் இங்கு இருந்து 10.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த நிலையில் நேற்று காலையில் செங்கல்பட்டு ஜங்ஷன் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதன்காரணமாக தேஜஸ் ரெயில் திருச்சிக்கு ஒரு மணிநேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்தது. பின்னர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரைக்கு மதியம் 1 மணிக்கு சென்றடைந்தது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.


Next Story