தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story