பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பை காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். நேரில் ஆய்வு


பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பை காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். நேரில் ஆய்வு
x

விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். அம்பை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஏற்கனவே கடந்த 10-ந்தேதி அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்றும், இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சுபாஷ், மாரியப்பன், வேதநாராயணன் ஆகிய 3 பேர் இன்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். மற்றும் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் அம்பை யூனியன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அம்பை காவல் நிலையத்திற்குச் சென்ற அமுதா ஐ.ஏ.எஸ்., அங்குள்ள அறைகள், பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் ஆய்வு செய்தார். விசாரணை அதிகாரியின் திடீர் வருகையால் அம்பை காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story