திருமண ஆசை வார்த்தை கூறி 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது


திருமண ஆசை வார்த்தை கூறி 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது
x

திருமண ஆசை வார்த்தை கூறி 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி, திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாயார், செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்தனர்.

மறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பொன்னேரி அருகே உள்ள வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது 20) என்பவர் தன்னை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

இந்த வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல் செங்குன்றத்தைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியில் கடை வைத்துள்ள எருமைவெட்டிபாளையத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி (42) என்பவரையும் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story