தாய் பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
தாய் பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
குடும்ப பிரச்சினை
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த வீரமுத்துவின் மகன் அருள்(வயது 22). இவரது தாய் குடும்ப பிரச்சினை காரணமாக, மங்களத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் அருள் தானே சமைத்து சாப்பிட்டு வந்தார்.மேலும் தாய் இல்லாததால் இறந்து விடலாம் போல் இருக்கிறது என்று அவரது தந்தையிடமும் அடிக்கடி கூறி வந்துள்ளார். அவரை வீரமுத்து சமாதானப்படுத்தி வந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில் தொடர்ந்து 4 நாட்களாக வீரமுத்து, தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்கொண்டு காட்டில் உள்ள அவரது ஆட்டுப்பட்டியிலேயே தங்கியுள்ளார். அப்போது தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அங்கு சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.