வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஐயனூர் ஊரை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் ராஜேஷ் (வயது 28). டிப்ளமோ படித்துள்ள இவர் கூலி வேலை செய்து வந்தார். மேலும் மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக ராஜேஷ், திப்பணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தன்னுடைய சகோதரி மாரீஸ்வரி வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராஜேஷ் வீட்டில் உள்ள சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story