கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நம்பிதலைவன் பட்டயம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள இசக்கியம்மன் கோவில் அருகே 2 பேர் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவர் நம்பிதலைவன்பட்டயம் கீழத்தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் முத்துபாண்டி (30) என்பதும், இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story