கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தருவை மைதானம் பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் யோக பிரகாஷ் (வயது 25) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே போலீசார் யோக பிரகாஷை கைது செய்து அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story