இளம்பெண் தற்கொலை
கடையநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பரமசிவன் என்பவருடைய மனைவி பேச்சித்தாய் (வயது 36). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் பேச்சித்தாய் வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உறவினர்கள் பேச்சித்தாயை கண்டித்துள்ளனர். இதனால் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பேச்சித்தாயிடம் பேசாமல் ஒதுங்கி இருந்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த பேச்சித்தாய் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் பேச்சித்தாயை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பேச்சித்தாய் இறந்தார். இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.