நன்னடத்தை பிணையை மீறிய வாலிபருக்கு சிறை


நன்னடத்தை பிணையை மீறிய வாலிபருக்கு சிறை
x

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சாலியார் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அந்த பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். இந்த கடையை டவுன் அடைக்கலமாதா கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 22) என்பவர் வாளால் அடித்து சூறையாடினார். இதுகுறித்த புகாரின் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். ஏற்கனவே முருகன் நன்னடத்தை பிணையை எழுதி கொடுத்தார். அதை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால், இவர் மீது இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய அவர் பிணையை மீறி குற்றம் புரிந்த முருகனை 2 மாதம் 16 நாட்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story