விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 25), விவசாயி. இவருடைய மனைவி அபிராமி (23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 8-ந் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அபிராமி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அபிராமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story