பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பல்வேறு துறைகளின் சார்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், இந்த தொழில்நுட்ப கருத்தரங்கை நமது கல்லூரியில் தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அறிவை விரிவு செய்தல், புதியனவற்றை படைத்தல், எதிலும் சிறந்து விளங்குதல் போன்ற உயர்ந்த இலக்கோடு பயணிக்கும் இந்த உன்னதமான பயணத்தில் நான் கலந்துகொள்வதில் உண்மையிலேயே மிகுந்த மரியாதையாக கருதுகிறேன். முதலாவதாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து இங்கு வந்திருக்கும் மாணவர்களுக்கு எனது அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் நீங்கள் அடையவேண்டிய வெற்றிக்கு எல்லையே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றார். தொடர்ந்து இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.