கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டமானது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து பதவி உயர்வு வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.