அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்


அண்ணாமலை பல்கலைக்கழக  ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்
x

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் நல சங்க தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள் செல்வராஜ், அசோகன், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன், ஊழியர் சங்க முன்னாள் பொது செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க பொது செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.


Next Story