ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

குத்தாலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இதில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல, கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஜெயபாரதி வரவேற்றார். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் அசோக்குமார் கலந்துகொண்டு பேசினார்.






Next Story