ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
ஆறுமுகநேரியில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதவா அறக்கட்டளை மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அவர்கள் அறக்கட்டளைக்கு ஆதரவான பால்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாங்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள். எனவே இந்த பால் பண்ணை மற்றும் உணவகத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்று ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story