ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடையத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தென்காசி
கடையம்:
கடையம் ஆசிரியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் கடையம் சரகத்தில் 320-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில் இதற்கு முன்பு பொறுப்பில் இருந்த செயலர் பணி மாறுதலாகி சென்றுவிட்டார்.
இந்தநிலையில் தற்போது பொறுப்பு செயலர், அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை என்றும், பொறுப்பு ஏற்ற நாள் முதல் எந்த பலனையும் ஆசிரியர்கள் பெறவில்லை எனக்கூறியும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அவரை மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்புவதற்கும், நிரந்தர செயலாளர் வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட பதிவாளருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story