கண்களில் கருப்பு துணி கட்டி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்களை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் எஸ்.சி.இ.ஆர்.டி. இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் இந்திரா காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் மாலா, வட்டார செயலாளர் கணேசன், வட்டார பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர்.
சிங்கம்புணரியில் வட்டார தலைவர் லதா தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ், திருப்பத்தூர் கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், சிக்கன நாணய சங்க தலைவர் பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பேசினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வைரம், ராகவன், வட்டார துணை தலைவர்கள் கலைமதி, செல்வி, சரவணன் வட்டார துணை செயலாளர்கள் சித்ராதேவி, அஜ்மீர், சிவந்தி மாலை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். வட்டார பொருளாளர் ஞானவிநாயகன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர்.
.காளையார் கோவிலில் வட்டார தலைவர் லதா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் ரோஸ், மாவட்ட துணை தலைவர் ரவி, துணை செயலாளர் ஜான் அந்தோணி, கல்வி மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ், செயலாளர் அருள்மொழி செல்வன், பொருளாளர் கமல்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேவகோட்டையில் தலைவர் ஜோசப் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் சுதா ஆகியோர் பங்கேற்றனர். திருப்பத்தூரில் தலைவர் ஸ்ரீதர் ராவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன், கல்வி மாவட்ட செயலாளர் சிங்கராயர், செயலாளர் முத்துமாரியப்பன், பொருளாளர் நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.புதூரில் தலைவர் பிராங்கிளின் ஆரோக்கிய ஜேசுதாஸ் தலைமையிலும், சாக்கோட்டையில் தலைவர் லெவே ஜோசப் துரை தலைமையிலும், கல்லலில் தலைவர் ஆரோக்கிய லூயிஸ் லெவே தலைமையிலும், திருப்புவனத்தில் தலைவர் சக்திவேல் தலைமையிலும், இளையான்குடியில் தலைவர் அமல்ராஜ் தலைமையிலும், மானாமதுரையில் தலைவர் பாலகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.