பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா ெகாண்டாடப்பட்டது. விழாவில் 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி பேசும்போது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்' என கூறினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை திருமகள் கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் வரலாறு குறித்தும், ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். 4-ம் ஆண்டு மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர்.
இணை பேராசிரியர் மற்றும் செவிலியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவி அஜிதா நன்றி கூறினார்.