தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

வள்ளியூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்டம் சார்பில் வள்ளியூர் காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜான் ரோஸ், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில பொருளாளர் வில்சன் பர்னபாஸ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மராஜ் பிராங்களின், கருணாகரன், முன்னாள் மாநில துணைத்தலைவர் லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமார், மாவட்ட துணைச் செயலாளர் நிர்மலா ராஜம், வள்ளியூர் வட்டார தலைவர் ஜோசப் பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். மாவட்ட பொருளாளர் துரை நன்றி கூறினார்.


Next Story