ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்


ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வினோத்குமார், மலர்ச்செல்வி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் பானுரேகா வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் சுதாகரன், மாநில துணை செயலாளர் சரவணன் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர். மாவட்ட செயலாளர் குப்புராஜன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

உண்ணாவிரத போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் கலைந்து சமவேலைக்கு சம தியம் வழங்க வேண்டும். பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்வி கொள்கை 2020-ல் இருந்து நீக்கப்பட வேண்டும்.

20 அம்ச கோரிக்கைகள்

ஒரே நாடு ஒரே ஒரு கொள்கை என்ற 7-வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெரும் வகையில் அரசு நேரடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாநில துணைத்தலைவர் வேலு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


Next Story