நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்; கலெக்டர் பழனி உத்தரவு


நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியன்று   டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்;      கலெக்டர் பழனி உத்தரவு
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்


நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள், தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகளின்படி அரசால் நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் பிறந்த நாளான வருகிற 28.9.2023 (வியாழக்கிழமை) மற்றும் காந்தி ஜெயந்தியான 2.10.2023 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார். எனவே மேற்கண்ட 2 நாட்களிலும் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது.


Next Story