டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கண்மாய் கரை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டும் கடையில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் காணாமல் போனதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள், தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டாஸ்மாக் கடையில் பணம் எதுவும் இல்லாததால் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் தடயங்களை மறைக்க கடை முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story