இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ்


இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு -  அமைச்சர் அன்பில் மகேஷ்
x

அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என அமைச்சை அன்பில் மகேஷ் கூறினார்.

சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக படித்தது போல் இந்த ஆண்டும் பள்ளிகளுக்கும், ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6-12ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளி சீருடையில் இருந்தாலே பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு என்றார்.


Next Story