ரூ.18 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை


ரூ.18 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திறந்து வைத்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடுவன்பட்டி ஊராட்சியில் உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றர். இந்த கிராமத்திற்கு செல்லுகின்ற சாலை சுமார் 25 ஆண்டுகளாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரிடம் முறையிட்டனர். உடனடியாக 2022-23-ம் ஆண்டுக்கான மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.18.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, சாலை பணி முடிவு பெற்று அதன் திறப்பு விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒடுவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை கருணாகரன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி நகரச் செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் கலந்து கொண்டு சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து சேர்வைக்காரன்பட்டி சாலையில் நடந்து சென்று சாலை பணிகள் குறித்தும் சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி அ.தி.மு.க. ஒன்றிய,நகர நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story